அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்றும் 6வது நாளாக வருமானவரித்துறை சோதனை...

published 1 year ago

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்றும் 6வது நாளாக வருமானவரித்துறை சோதனை...

கோவை: கோவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்றும் 6வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.


கோவை ராமநாதபுரத்தில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம் ஆகிய 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 3 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில், சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமாரின் வீட்டில் நடந்த சோதனை ஏற்கனவே முடிந்த நிலையில், சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தில் 4 நாட்கள் நடைபெற்ற சோதனை நேற்று இரவு 11.30 மணிக்கு முடிவு பெற்றது. சோதனையில் அதிகாரிகள் அங்கு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் கைப்பற்றிய பொருட்களின் விவரம் வெளியிடப்படவில்லை. இந்த சோதனை ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் எனவும், அதன்பின்னரே கோவையில் சோதனை நடைபெற்ற இடங்களில் பறிமுதல் ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe