"ஆபரேஷன் கந்துவட்டி" கந்துவட்டி கொடுமையா.. உடனே வாங்க.. அழைக்கும் கோவை காவல்துறை

published 2 years ago

"ஆபரேஷன் கந்துவட்டி" கந்துவட்டி கொடுமையா.. உடனே வாங்க.. அழைக்கும் கோவை காவல்துறை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்க முன்வரலாம் என்றும், புகார்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழை எளிய  நடுத்தர மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது தவிர்க்க இயலாத செலவினங்கள் மற்றும் வியாபார விஷயங்களுக்காக அதிக வட்டி வசூலிக்கும் கந்துவட்டி காரர்களிடம் கடனை வாங்குகின்றனர்.

தொடர்ந்து அதற்கு வட்டியும், அபராதமும் கட்டி அசலை திருப்பி செலுத்த இயலாத அளவுக்கு கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.  இதனைத் தடுக்கும் விதமாகவும், கந்துவட்டி கொடுமைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் உத்தரவின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் கண்காணிப்பில் "ஆபரேஷன் கந்துவட்டி" என்ற தலைப்பில் சிறப்பு செயல் திட்டம் வகுக்கப்பட்டு கோவை மாநகரில் கந்துவட்டி தொழில் புரிவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

கந்து வட்டி சம்பந்தமாக பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு புகார் பெறப்பட்டு கந்து வட்டி தடைச் சட்டம் 2003 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக எவ்வித தயக்கமும், பயமும் இன்றி புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில் கந்துவட்டியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe