பாரத் டெக்ஸ் 2024 ஜவுளி கண்காட்சி எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா..?

published 1 year ago

பாரத் டெக்ஸ் 2024 ஜவுளி கண்காட்சி எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா..?

கோவை: பாரத் டெக்ஸ் 2024 ஜவுளி கண்காட்சியை ஜவுளியை தொழில் முனைவோர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் ரோட் ஷோ நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை  அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் , கோவையில் இது போன்ற நிகழ்வு நடத்தப்படுவது குறித்து தனக்கு தெரியாது எனவும், இருந்தாலும் 
டெல்லியில் பிப்ரவரி 26 முதல் 29 வரை  நடைபெறும் ஐவுளி கண்காட்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த பையர்கள் வருவார்கள் என்பது ஒரு நல்ல வாய்ப்பு எனவும், தமிழக அரசு நிச்சயம் இந்த பாரத் டெக்ஸ் 2024 நிகழ்வில் கலந்து கொள்ளும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கொங்கு பகுதியில் இருந்து 600 தொழில் முனைவராவது கலந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி ஜவுளி கண்காட்சி தொடர்பாக தொழில் முனைவோருக்கு விளக்குவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தான் தற்செயலாகதான் இந்த நிகழ்வுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். இந்த கண்காட்சி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கும் எனவும் ஓரே இடத்தில் 3000 க்கு மேற்பட்ட பையர்களை சந்திக்க முடியும் என்பதால் வர்த்தக ரீதியாக நல்ல வாய்ப்பை அளிக்கும் எனவும் அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe