முட்டை கோஸ் விவசாயத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை...

published 1 year ago

முட்டை கோஸ் விவசாயத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை...

கோவை: முட்டை கோஸ் விவசாயம் தொடர்ந்து நலிவடைந்து வரும் நிலையில் முட்டைக்கோசை விளைவித்த விவசாயிகள் கடும் விலை சரிவை சந்தித்து வருவதாகவும் எனவே முட்டைக்கோஸ் விளைவிக்கும் விவசாயிகளையும்  விவசாயத்தையும் பாதுகாப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், குப்பனூர்,மாதம்பட்டி கரடிமடை தென்கரை தேவராயபுரம் தாழியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முட்டை கோஸ் சாகுபடி செய்து வருவதாகவும் இந்நிலையில் பருவநிலை மாற்றங்களால் இதனை உரிய நேரத்தில் பயிரிட முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு 15,000 முதல் 18,000 நாற்றுகள் நட்டு வரும் நிலையில் புழுக்கள், பூஞ்சன நோய் வனவிலங்கு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றால் இந்த விவசாயம் பாதிக்கப்படுவதாகவும்  தொடர்ந்து ஆறு மாத காலங்களுக்கும் மேலாக இதன் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இந்த விவசாயத்தை பாதுகாப்பதற்கு தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து இதனை நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், தோட்டக்கலை மூலமாக அதிக விலை சரிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து ஐம்பதாயிரம் ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய காலத்தில் ஏற்றுமதி செய்திட மாவட்ட நிர்வாக முன் வர வேண்டும் உழவர் சந்தைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து முட்டைக்கோஸ் வருவதை தவிர்த்து உள்ளூர் முட்டை கோஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விலையில்லாத காலகட்டங்களில் தோட்டக்கலை சார்பாக இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்க அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கை மனு இச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது. மேலும் மனு அளிக்க வந்த விவசாயிகள் அவர்களது கோரிக்கைகளை பதாகைகளாக ஏந்தியும் முட்டைகோசுகளை ஏந்தியும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் முட்டைக்கோசுக்கு உரிய விலை கிடைக்காததால் ஒரு கிலோ முட்டைக்கோஸ் ஐந்து ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe