பீளமேடு பகுதியில் 20 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை பாத்திரங்களை திருட்டு...

published 1 year ago

பீளமேடு பகுதியில் 20 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை பாத்திரங்களை திருட்டு...

கோவை: கோவை பீளமேடு கோபால் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(55). இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு நஞ்சப்பா ரோட்டில் உள்ளது. ஜெயலட்சுமி ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். நஞ்சப்பா ரோட்டில் உள்ள வீட்டை லாவண்யா என்பவர் மாதத்தில் 2 முறை சென்று சுத்தம் செய்வது வழக்கம். மற்ற நேரங்களில் வீடு பூட்டியே கிடக்கும் என்று தெரிகிறது. ராஜேஷ்வரியும் அடிக்கடி வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று லாவண்யா வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே லாவண்யா செல்போனில் தொடர்பு கொண்டு ராஜேஷ்வரியிடம் தெரிவித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான பித்தளை சாமான்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து ராஜேஷ்வரி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது செங்கல்பட்டை சேர்ந்த புகழேந்தி(22), வால்பாறையை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(31), கேரளா மலப்புரத்தை சேர்ந்த பூக்கயா(47), கோவை தடாகம் ரோடு வெங்கிடாபுரத்தை சேர்ந்த முருகன்(63) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe