பெண்கள் கவனத்திற்கு..! 3 ஆம் தேதி வரை லூலூ மார்கேட்டின் அதிரடி ஆப்பர்கள்..!

published 1 year ago

பெண்கள் கவனத்திற்கு..! 3 ஆம் தேதி வரை லூலூ மார்கேட்டின் அதிரடி ஆப்பர்கள்..!

கோவை: தமிழ்நாட்டில் முதலில் நிறுவப்பட்ட லூலூ ஹைப்பர் மார்க்கெட் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில்லூலூ ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.

கோவையில் தொழில் நகரம் என்பதால், பல டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் நிறைந்திருக்கின்றன. எனினும் இந்த லூலூ மார்கேட்டில் பல பொருட்களை ஒரே இடத்தில் வாங்கும் இடமாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. குறிப்பாக, வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இங்கு விற்க்கப்படுகின்றன இதற்குள் அடங்கிவிட்டன.. லூலூ மால் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை அதன் விற்பனையில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. இந்த லூலூ மார்கேட் வந்ததினால், நகரத்திலுள்ள மற்ற ஷாப்பிங் மார்க்கெட்டுகள், மால்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டு வருகிறது எனலாம். சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு, தமிழகத்தின் அனைத்து கடைகளும் ஆஃபர்கள் போடப்பட்ட நிலையில் லூலூவிலும் தீபாவளி சிறப்பு விற்பனையை வெளியிட்டிருந்தனர். அதல் 60 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும், ஜெக்ஸ் என்ற புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் அறிமுக விழா நடத்தப்பட்டது. இதில், vidiem havells, Bosch, போன்ற நிறுவனங்களின் புதிய  பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், 5000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, 500 ரூபாய்க்கான பரிசு கூப்பன்களை அறிவித்திருந்தது இது பலரையும் கவர்ந்திழுத்தது. மேலும் புதிதாக திருமணமான 50 தம்பதிகளுக்கு, ரூ.1999 க்கு மேல் பொருட்கள் வாங்கினால் அரை கிராம் தங்க காசு பரிசாக வழங்குவதாக அறிவித்தது அனைவரையும் வியப்படைய சமீபத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி அனைவரையும திகைக்க  வைத்துவிட்டது லூலூ நிறுவனம்.

இந்த பரிசு பொருட்களை வாங்குவதற்காகவே, மக்கள் லூலூவில் குவிந்து வருகிறார்களாம்.. இப்போதுகூட, பண்டிகை கால சிறப்பு தள்ளுபடியை தொடர்ந்து அறிவித்தபடியே உள்ளதாம் 

மேலும் தற்போது, லூலூ மாலில் பெண்களை கவரும் பொடுட்டு "பியூட்டி பெஸ்ட்" என்ற பெயரில்  மேக் அப் பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடியில் விற்க்கப்படுகிறது..

இதனை தொடர்ந்து பெண்கள் கூட்டம் லூலூவில் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வருகிற 3-ந் தேதி வரை மட்டுமே இந்த தள்ளுபடி என்பதால், விற்பனை அதிகரித்துள்ளது. 50 சதவீத தள்ளுபடியோடு கேஷ்பேக் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மால் நாளெல்லாம் பிஸியாக காணப்படுகிறதாம். 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe