மீண்டும் ஒத்திவைக்கப்படும் அரையாண்டு தேர்வு…! பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு..!

published 1 year ago

மீண்டும் ஒத்திவைக்கப்படும் அரையாண்டு தேர்வு…! பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு..!

கோவை: மிக்ஜாம் புயலினால் மாணவர்களின் பள்ளி புத்தகங்கள் சேதம் அடைந்ததால் மீண்டும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

 டிசம்பர் 7ஆம் தேதி முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கவிருந்தது மேலும்  6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புயலினால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நாளை (11.12.2023) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

புயலின் காரணமாகப் பல மாணவர்களின் புத்தகங்கள் சேதம் அடைந்தது, புயலுக்குப் பிறகு நாளை தான் பள்ளிகள் திறக்கவுள்ளன. இந்த நிலையில் வெகுவிறைவில் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்குப் படிப்பது கடினம் என்பதனால் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe