கோவை மாநகரில் 50 அடி தூரத்திற்கு ஒரு கண்காணிப்பு கேமரா- மாநகர காவல் ஆணையாளர் தெரிவிப்பு...

published 1 year ago

கோவை மாநகரில் 50 அடி தூரத்திற்கு ஒரு கண்காணிப்பு கேமரா- மாநகர காவல் ஆணையாளர் தெரிவிப்பு...

கோவை: கோவை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்காக 50 அடி தூரத்திற்கு ஒரு கண்காணிப்பு கேமரா என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 24 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராவிற்கான அறை  ஆகியவற்றை திறந்து வைத்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இராமநாதபுரம் பகுதியில் 30 கேமராக்கள், செல்வபுரம் பகுதியில் 24 கேமராக்கள் என 54 கேமராக்கள் ஒரே நாளில் நிறுவப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். கோவை மாநகரத்தை பொருத்தவரை 30 ஆயிரம் கேமராக்கள் தற்போது வரை செயல்பாட்டில் உள்ள சூழலில் 15000 கேமராக்கள் முக்கிய சாலைகளிலும் 15 ஆயிரம் கேமராக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து 110 ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தேவைப்படும் இடங்களில் இது போன்ற நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும்  கூறிய அவர்,மாநகரில் 50 அடி தூரத்திற்கு ஒரு கேமரா என்ற அடிப்படையில் நிறுவப்பட்டு வரும் நிலையில் மேலும் 5 ஆயிரம் கேமராக்கள் நிறுவ உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேபோல் கோவை மத்திய சிறையில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதாக கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் கொடியை வரைந்ததை தொடர்ந்து சிறைத் துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருவதாகவும் நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும்  ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe