கோவை, திருப்பூர், பொள்ளாச்சியில் எவ்வளவு நேரத்திற்கு மழை?

published 1 year ago

கோவை, திருப்பூர், பொள்ளாச்சியில் எவ்வளவு நேரத்திற்கு மழை?

கோவை: கோவை, திருப்பூர், பொள்ளாச்சியில் எவ்வளவு நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கணித்து கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும்  நெல்லையில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. கோவை உட்பட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்து லேசான மழை பெய்து வருகிறது.

இதனிடையே கோவை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை  நிலவரம் குறித்து கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கணித்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரின் சில பகுதிகளில் மிதமானது முதல் சிறிது கனமழை இன்று நாள் முழுவதும் தொடரும். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்.

மேற்கு மண்டலத்தில் வடக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe