உங்களை சுற்றி சைபர் குற்றவாளிகள்: கோவை மக்களுக்கு போலீசார் வழங்கும் அறிவுரை.. மிஸ் பண்ணாம படிங்க..

published 1 year ago

உங்களை சுற்றி சைபர் குற்றவாளிகள்: கோவை மக்களுக்கு போலீசார் வழங்கும் அறிவுரை.. மிஸ் பண்ணாம படிங்க..

கோவை: கோவையில் போலீஸ் ஸ்டேஷன்களில் கூட்டம் நிறைந்து வழியும் இடமாக சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் மாநகர சைபர் கிரைம் போலீசில், 6000க்கும் மேற்பட்டோர் பல்வேறு புகார்கள் அளித்து உள்ளனர்.

ரூ.44 கோடிக்கும் மேல் பலர் பணத்தை இழந்து உள்ளனர். இதையடுத்து மக்கள் தொடர்ந்து ஏமாறுவதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தற்போது போலீசார் விழிப்புணர்வு நோட்டீசை கல்லுாரிகள், பள்ளிகள், ஐ.டி., நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வழங்கி சைபர் கிரைம் மோசடிகளை விளக்கி வருகின்றனர்.

போலீசார் வழங்கி வரும் நோட்டீசில் கூறியிருப்பது:

* தெரியாத நபர்கள் டெலிகிராம், வாட்ஸ் அப், பேஸ் புக், வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டால் பதில் அளிக்காதீர்கள், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

* பகுதி நேர வேலை வாய்ப்பு, யூடியூப் லைக், ரேட்டிங், டாஸ்க் ஆகியவற்றில் லாபம் தருவதாக பணம் கட்ட சொன்னால், கட்டாதீர்கள்.

* அதிக லாபம், வீட்டிலிருந்தே வேலை எனக் கூறி, ஆன்லைனில் முதலீடு செய்ய சொன்னால், செய்யாதீர்கள்.

* பேஸ் புக், வாடஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பரிசு பார்சல் அனுப்புவதாக கூறினால் நம்பாதீர்கள், பணம் கட்டாதீர்கள்.

* விமான நிலையம், சுங்கத்துறை, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் எனக் கூறி, உங்களை தொடர்பு கொண்டால் நம்பாதீர்கள், அது போலியான நபர்கள்.

* கார், பணம் பரிசாக விழுந்துள்ளது எனக் கூறி, பணம் கட்ட சொன்னால் கட்டாதீர்கள்.

* மொபைல் போன் அழைப்பு, மெசேஜ் மூலம், 1 சதவீதம் வட்டி மற்றும் மாணியத்துடன் லோன் தருவதாக கூறி, பணம் கட்ட சொன்னால் கட்டாதீர்கள்.

* எல்.ஐ.சி., யி-ல் பணம் வந்துள்ளது எனக் கூறி, அதனை பெறுவதற்கு பணம் கேட்டால், அருகிலுள்ள எல்.ஐ.சி., கிளையை அணுகவும்.

* கூகுலில் போலியான கஸ்டமர் கேர் எண்களும், தகவலும் உள்ளன, அதை பயன்படுத்தாதீர்கள், அபிஷியல் வெப்சைட்டை பார்க்கவும்.

* வங்கி கே.ஓய்.சி., அப் டேட், மின் கட்டணம், ஆதார் இணைப்பு என வரும் லிங்கை தொடதீர்கள், நம்பாதீர்கள், உங்கள் பணம் திருடப்படும்.

* பணம் இழந்தால், உடனே அழைக்க வேண்டிய இலவச எண் 1930, சைபர் கிரைம் புகாரை பதிவு செய்ய

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்தியை இயன்றளவில் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்பத்தவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe