கோவையில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம்

published 1 year ago

கோவையில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம்

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் டாடாபாத் பகுதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணி நேர வேலை நேரம், நிறுவன வாரியாக உறுப்பினர் குறை தீர்க்க குழு அமைப்பு, சட்ட உரிமைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் 50 க்கும் மேற்பட்டோர் தங்கள்  கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களையும் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்கத்தின் மாவட்ட செயலாளர் வினோஜ் ராமானுஜம் கூறுகையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக மருந்து விற்பனை பிரதிநிதிகள் வாட்டி வதைக்கப்படுவதாகவும் தினந்தோறும் பல்வேறு வகையில் இணையத்தின் மூலம் ஆலோசனைக் கூட்டங்களும், ஜிபிஎஸ் இணைத்து ஆண்லைன்  ரிப்போர்ட்டிங் என்ற முறையை கையாள சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் அதிக வேலை பளுவை சுமத்துவதாகவும் விற்பனை பிரதிநிதிகளை வேவு பார்க்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் கூறியதுடன், சட்டபூர்வமான பணி விதிகள் மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு தேவை என்றும் மத்திய அரசு இதனை சட்டமாக முத்தரப்பு குழு விவாதத்தின் அடிப்படையில் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe