கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்..!

published 1 year ago

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்..!

கோவை: தென் மாவட்டத்தில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர், தன்னார்வலர்கள் ஆதரவுக்கரம் நீட்டி உதவி வருகின்றனர். நிவாரணப்பொருட்கள் பல இடங்களில் இருந்தும் அனுப்பப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப்பொருட்கள் கோவை ஆர்.எஸ்.புரம் மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் இருந்து லாரியில் நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 2200 பிரெட் பாக்கெட்டுகள், 1000 லி தண்ணீர் பாட்டில்கள், 9 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், வெங்காயம், அரிசி, 300 நாப்கின் உள்ளிட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. இவை தென் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வழங்கப்பட உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe