கோவையில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது...

published 1 year ago

கோவையில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது...

கோவை:  கோவையில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, செல்வபுரம் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 5 பேர் கும்பலை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலி தொழிலாளிகள் பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (24), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ராகுல் (29), ஹிலார் (32), சூரியபிரகாஷ் (26) மற்றும் செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்த விஜய் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுந்தராபுரம் போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே நின்றிருந்த ஒரு வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். இதில், அவர் வாலிபர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்ற பீளமேடு புதூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிபிரசாத் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், போத்தனூர் போலீசாருக்கு குறிச்சி பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுமித்ரா (30) என்பவர் கஞ்சா விற்றது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe