மனு மூலம் ரயில் நிலையத்தில் தேசியக்கொடியை மாற்றிய நபர்

published 1 year ago

மனு மூலம் ரயில் நிலையத்தில் தேசியக்கொடியை மாற்றிய நபர்

கோவை: கோவை சேர்ந்த நபர் ஒருவர் மத்திய ரயில் நிலையத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் மாறி இருப்பதை கண்டு, அதை சரி செய்ய வேண்டும் என்று மனு வழங்கி அதற்கு தீர்வு கிடைக்க செய்திருப்பது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

கோவை ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பம் 2019ல் அமைக்கப்பட்டு அதில் 30 அடி நீளம் 20 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இயற்கை காரணங்களினால் தேசியக்கொடி சில நேரங்களில் சேதம் அடைந்தால் அதை கண்டறிந்து அதிகாரிகள் மாற்றவேண்டும்.

இந்நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி ரயில் நிலையத்தில் உள்ள RMS தபால் மையத்தில், காந்திமா நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது மூத்த மகள் PK ப்ரணவிக்காவுக்கு ஆதார் அடையாள அட்டை புதுப்பிக்கவும் இளைய மகளுக்கு ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கவும் அங்கு சென்றுள்ளார்.

அவ்வாறு சென்று அந்த பணிகளை முடித்து விட்டு வெளியே வருகையில், தனது மகள் தேசிய கொடிக்கு சல்யூட் செய்வதை பார்த்து தானும் தேசிய கொடிக்கு மரியாதை செய்ய முயன்ற போது தனது மூத்த மகள் கொடியில் உள்ள அசோக சக்கரம் நீல நிறத்திற்கு பதிலாக ஊதா நிறத்தில் இருப்பதை தந்தையிடம் சொல்லி இருக்கிறார்.

தேசிய கொடியில் அசோக சக்கரம் நீல வண்ணத்தில் தான் இருக்க வேண்டும் அதில் வண்ணங்கள் மாறக்கூடாது என்பதை வலியுறுத்தி, மனுவாக ரயில் நிலைய இயக்குனரிடம் பழனிசாமி புகார் அளித்தார்.

அதை பெற்றுக்கொண்ட அதிகாரி, இந்த கொடி அன்று மாலை அல்லது அடுத்த நாள் மாற்றப்படும் என பழனிசாமியிடம் தெரிவித்து இருந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்தும் தான் வழங்கிய மனு குறித்தும் பழனிச்சாமி கோவையில் உள்ள நாளிதழ்களுக்கு தகவல் அனுப்பி இருக்கிறார். இதை தமிழ் நாளிதலான தினகரன் செய்தியாக டிசம்பர் 25ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

மனு வழங்கிய அடுத்த நாள் தேசியக்கொடி மாற்றப்பட்டு இருக்கிறதா என்பதை காண்பதற்காக கோவை ரயில் நிலையத்திற்கு மீண்டும் பழனிசாமி சென்றபோது, கொடி மாற்றப்படாமலேயே இருந்துள்ளது.

இதை நேரில் சென்று பார்த்த பழனிசாமி மீண்டும் ரயில் நிலைய இயக்குனரிடம் இது குறித்து பேசுகையில் கொடி டிசம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன்படி நேற்று மாலை பழைய தேசியக் கொடியை முறையாக இறக்கி அசோக சக்கரத்தின் நிறம் சரியாக இருக்கும் புதிய தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வு நடக்கையில் பழனிசாமியும் அங்கு இருந்துள்ளார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe