சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின்போது, மக்களின் அன்பைக் கண்டு கைகூப்பி கதறி அழுதனர் விஜயகாந்த்தின் மகன்களான சண்முக பாண்டியனும், விஜய பிரபாகரனும், அவர்கள் இருவரும் தங்கள் தந்தையை எவ்வளவு அக்கரையுடன் பார்த்துக்கொண்டனர் என்பது பற்றி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேசிய விஷயம் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
கேப்டன் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2 வாரங்களுக்கு முன்பாக தான் உடல் நலம் சிறிது தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதன்பிறகு தேமுதிக பொதுக்குழு கூட்டத்திற்கும் அவரை அழைத்து சென்றனர். இந்நிலையில் தான், கடந்த 27ஆம் தேதி விஜயகாந்துக்கு கொரோனா தொற்றுக் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் (டிசம்பர் 28) காலை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
நடிகரும் சிறந்த மனிதருமான விஜயகாந்தின் மறைவு தேமுதிக தொண்டர்களையும், அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. மக்களும், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்துக்கு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த்தின் இரு மகன்களான சண்முக பாண்டியனும், விஜய பிரபாகரனும் தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். "அப்பா.. அப்பா.. எழுந்து வாங்கப்பா" என அவர்கள் தேம்பித் தேம்பி அழுத காட்சிகள் பார்ப்போரைக் கலங்க வைத்தது.
இந்நிலையில், நேற்று தீவுத் திடலில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல், பிற்பகலில், அங்கிருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் செல்லும் வழியெங்கும், மக்கள் திரண்டு, விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மகன்கள் மக்களின் அன்பை கண்டு கதறி அழுதனர்.
மக்களை நோக்கிக் கைகூப்பியபடி, அவர்கள் கண்ணீர் விட்ட காட்சிகள் பார்ப்போரை கண்ணீர் சிந்த வைத்தது.
விஜயகாந்த் உடல் நலிவுற்றது முதலிறுத்து , அவரை கண்ணும் கருத்துமாகப் அவரது மகங்கள் அவரை பார்த்து வருகின்றனர் என்றும் அமெரிக்காவுக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை மேற்கொண்டு வந்த போதும் அவர்கள் இருவரும் அவருடனையே தங்கி அவரை பராமரித்துக் கொண்டும் இருந்தனராம், மேலும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிற்கு இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதும் அவர்கள் அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல், விஜயகாந்த் உடல்நலனை தேற்றுவதிலேயே அக்கறை கொண்டிருந்தனர்.
விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் குறித்து பிரேமலதா முன்பு ஒரு பேட்டியில் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது சில சமயங்களில் கேப்டன் விஜயகாந்த் சாப்பிட முடியாமலும், டாய்லெட் போக முடியாமலும் கஷ்டப் பட்டிருக்கிறார். அப்போது எல்லாம் அவரை டாய்லெட்டுக்கு அழைத்து செல்வது தொடங்கி, சுத்தம் செய்வது வரை எல்லாமே எனது இரண்டு பிள்ளைகளும் தான். ஒரு முறை கூட இதில் அவர்கள் அதிருப்தி அடைந்ததே இல்லை.
எங்க அப்பாவுக்கு நாங்கதான் செய்வோம் என இருவருமே பாசமாக கேப்டனை பார்த்துக் கொள்வார்கள். அமெரிக்காவில் மருத்துவமனையில் என் மகன்கள், கேப்டனை இப்படி கவனிப்பதை அங்கிருந்த மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். அமெரிக்காவில் எல்லாம் பிள்ளைகள், தங்கள் அப்பா அம்மாவை எல்லாம் பெரிதாக கவனிக்க மாட்டார்கள். ஒரு வயது வரை தான் கூடவே இருப்பார்கள்.
கேப்டனை, விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் தாங்கித் தாங்கி கவனிப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்த தாய்மார்கள் என்னிடம் வந்து, "உங்க ரெண்டு பசங்களை பார்த்ததற்கு பிறகு எங்க பிள்ளைகள் அடுத்த ஜென்மத்திலாவது இந்தியாவில் பிறக்க வேண்டும் என நாங்க ஆசைப்படுகிறோம்" எனக் கூறியதாக பிரேமலதா கூறியுள்ளார்.
இந்த தகவலை கேட்ட பலரும் பெற்றால் இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற வேண்டும் என்றும் விஜயகாந்துக்கு இப்படிப்பட்ட மகன்களா என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!