கோவையில் 2023ம் ஆண்டு என்னென்ன குற்றங்கள்..? எத்தனை குற்றங்கள்..? முழு விவரம்

published 1 year ago

கோவையில் 2023ம் ஆண்டு என்னென்ன குற்றங்கள்..? எத்தனை குற்றங்கள்..? முழு விவரம்

கோவை: கோவை மாநகர பகுதியில் மட்டும் 2023ம் ஆண்டில் பதிவான மொத்த குற்ற வழக்குகள் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.

அமைதியான, நல்ல சீதோசனை நிலை கொண்ட, மரியாதை கொடுத்து பேசும் மக்கள் வாழும் ஊர் என்ற பெயரை கோவைக்கு ஈட்டிக் கொடுத்துள்ளனர் நம்ம கோவை மக்கள். இப்படிப்பட்ட நமது கோவையில் கடந்த சில ஆண்டுகளாக குற்ற வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

குற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் பதிவாகும் குற்றங்கள் குறைவாகவே இருப்பதாகவும் ஆண்டுதோறும் காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், 2023ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குற்றங்களின் தன்மை மற்றும் எண்ணிக்கை விவரங்களை மாநகர காவல்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கோவையில் 2023ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் மற்றும் எண்ணிக்கை விவரங்கள் பின்வருமாறு:

கொலை - 22
கொலை முயற்சி - 32
அடிதடி - 324
வழிப்பறி - 78

கதவை உடைத்து கொள்ளை - 3
பகல் நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை - 52
இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை - 136
திருட்டு - 1410
இரு சக்கர வாகன திருட்டு - 627

பாலியல் வன்கொடுமை 
-6
பெண்கள், சிறுமிகள் கடத்தல் - 1
வரதட்சனை மரணம் - 0
கணவன், கணவர் வீட்டார் கொடுமை - 35
பாலியல் குற்றங்கள் - 186
போக்சோ வழக்குகள் - 16

இத்தனை குற்றங்கள் கோவை மாநகர பகுதிகளில் 2023ம் ஆண்டு பதிவாகியுள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe