திமுக அரசையும் பாதுகாப்பதும், முதல்வர் ஸ்டாலின் கரத்தை பலப்படுத்துவதும் நமது பணியாக இருக்க வேண்டும்- எம்பி பி.ஆர்.நடராஜன்...

published 1 year ago

திமுக அரசையும் பாதுகாப்பதும், முதல்வர் ஸ்டாலின் கரத்தை பலப்படுத்துவதும் நமது பணியாக இருக்க வேண்டும்- எம்பி பி.ஆர்.நடராஜன்...

கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 74.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோவை சங்கனூர் பகுதியில் ஆரம்பப்பள்ளியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்று சுவர், இச்சிப்பட்டி காலனியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம்,ரங்கநாதபுரம் ஆரம்ப பள்ளியில் 2.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீளம் தாண்டுதல் தளம், வீரகேரளம் ஆனந்தா நகர் பகுதியில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், வடவள்ளி மகாராணி அவன்யூ பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் ஆகியவற்றின் கட்டிட பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில் பேசிய பி.ஆர். நடராஜன், பொது விநியோக திட்டம் ஏழை எளிய மக்களுக்கானது மட்டும் அல்ல. இந்த தேசத்தின் அனைத்து பகுதி மக்களின் தேவை என்பதை கவனத்தில் கொண்டு பொது விநியோகத் திட்டம் பாதுக்காக்கபட வேண்டும். நான் லேபர் கமிட்டி உறுப்பினராக இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றிருந்தேன். அங்கு குடிசைத் தொழிலாக வளையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் பேசியபோது, குடும்பத்தில் உள்ள அனைவரும் உழைத்தால் தான் 120 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என தெரிவித்தனர். ஆந்திராவில் எளிய மக்களின் நிலை இப்படி இருக்க அங்குள்ள ரேஷன் கடைகளில் அரிசி ஒரு கிலோ 9 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.  ஆனால் திராவிட கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அரிசி விலை இல்லாமல் வழங்கபடுவதில்லை.கொரோனா காலத்தில் இலவச அரிசி வழங்கபடாமல் இருந்தால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பார்கள். எனவே பொது விநியோக திட்டத்தை காப்பது மிகவும் அவசியமாகும். உணவு அனைவருக்கும்  கட்டாயம் தேவை அதே போல் கல்வியும் அவசியம் என சொல்லும் அரசு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. திமுக அரசையும் பாதுகாப்பதும், முதல்வர் ஸ்டாலின் கரத்தை பலப்படுத்துவதும் நமது பணியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe