கோவையில் நடைபெற்ற பவளக்கொடி கும்மி குழுவினரின் 81வது அரங்கேற்ற நிகழ்வு...

published 1 year ago

கோவையில் நடைபெற்ற பவளக்கொடி கும்மி குழுவினரின் 81வது அரங்கேற்ற நிகழ்வு...

கோவை: கோவை ஆறுமுககவுண்டனூர் பகுதியில் உள்ள சிங்கனூர் அம்மன் கோவிலில் பவளக்கொடி கும்மி குழுவின் 81 வது அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று மாலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு கும்மி நடனம் ஆடினர்.

இது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், அழிந்து வரும் இந்த கும்மியாட்டத்தை மீட்டெடுத்து இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார். இளைய தலைமுறை அவர்களது நேரத்தை செல்போனிலும் சமூக வலைத்தளகத்திலும் செலவிட்டு கொண்டிருப்பதை மாற்றி சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் விதமாக இந்தக் கலையே தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருவதாக தெரிவித்தார். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் காசி தமிழ் சங்கம் மூலமாக அங்கும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள நடராஜர் சிலை ஐம்பொன் சிலை அடிக்கல் நாட்டு விழாவிலும் இதனை நிகழ்த்தியதாக தெரிவித்தார். 

மேலும் இந்த கும்மியாட்டம் மகாபாரத கதை குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். தற்போது இந்த கலை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டும் சுமார் 7500 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தக் கலை பயிற்சி அளித்து வருவதாகவும் கர்நாடக மாநிலத்திலும் இந்த குழுவை சேர்ந்த ஒருவர் பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe