தமிழக சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு 5ம் தேதி கோவை வருகை

published 2 years ago

தமிழக சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு 5ம் தேதி கோவை வருகை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15         

கோவை: தமிழக சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு வரும் 5ம் தேதி கோவை மாவட்டத்திற்கு ஆய்வுக்கூட்டம் நடத்த வருகை புரிய உள்ளது.

இக்குழு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் கணக்கு தணிக்கை அறிக்கை 2018-2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பேரவைக்கு காலதாமதமாக வைக்கப்பட்டது குறித்தும், 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய 2 ஆண்டுகளுக்கான அறிக்கைகள் பேரவைக்கு வைக்கப்படாமல் உள்ளது குறித்தும் அப்பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் 2013-2014 முதல் 2019-2020 வரையிலான காலத்தில் 6 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் பேரவைக்கு காலதாமதாக வைக்கப்பட்டது குறித்தும், 2020-2021 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை பேரவைக்கு வைக்கப்படாமல் உள்ளது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe