கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மக்களுக்கு மகிழ்ச்சி; சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்

published 1 year ago

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மக்களுக்கு மகிழ்ச்சி; சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோவை இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே தென்னக ரயில்வே பல்வேறு ஊர்களுக்கும் சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் கோவையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 16,17 தேதிகளில் இரவு 8.45 மணிக்கு சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோல் தாம்பரத்தில் இருந்து 17, 18 தேதிகளில் காலை 7.30 மணிக்கு கோவைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பூர், எக்மோர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கூறிய மாவட்ட மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe