கோயம்புத்தூர்-ல ஆரம்பிச்சு கொ** சென்னைக்கு வரேண்டி...  கோவையில் பெண் இயக்குநரை  மிரட்டிய அதிரடி சரஸ்வதி அதிரடி கைது..! - வீடியோ

published 2 years ago

கோயம்புத்தூர்-ல ஆரம்பிச்சு கொ** சென்னைக்கு வரேண்டி...  கோவையில் பெண் இயக்குநரை  மிரட்டிய அதிரடி சரஸ்வதி அதிரடி கைது..! - வீடியோ

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15   

கோவை: திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய `செங்கடல்', `மாடத்தி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள 'காளி' எனும் ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதில் காளி வேடத்தில் பெண் புகை பிடிப்பது போல் அமைந்துள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவி அதிரடி சரஸ்வதி காளி ஆவணப் படத்தின் இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோவில் பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் செல்வபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிரடி சரஸ்வதி மீது தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

வீடியோ (18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க வேண்டாம் ) : https://www.youtube.com/watch?v=5VRZTy8xTto

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe