குறைகிறது பெட்ரோல்-டீசல் விலை...!

published 1 year ago

குறைகிறது பெட்ரோல்-டீசல் விலை...!

கோவை: இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல்  மூலம் கணிசமான லாபம் கிடைத்ததாலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்த மாதம் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்குத் தகுந்தபடி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயமாகிறது. 

இந்தியாவில் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் உரிமை கொண்டுள்ளன. 

கடந்த 2022ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் மீதான சுங்கவரியை மத்திய அரசு குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.13, டீசல் ஒரு லிட்டர் ரூ.16 விலை குறைந்தது. இதற்கு அடுத்தபடியாக அதாவது 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயரவில்லை.

இந்த சூழலில் 2023-2024ஆம் நிதி ஆண்டின் முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.75,000 கோடி லாபம் மட்டும் உபரியாகக் கிடைத்துள்ளது. 

இதனால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகளைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் எரிபொருள் ஒரு லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பெட்ரோல்-டீசல் மீதான விலை குறைப்பு தங்களுக்கு சாதகமான பலனைக் கொடுக்கும் என்று பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe