கோவை தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை…

published 1 year ago

கோவை தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை…

கோவை: குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது.

நாட்டின் 75 வது குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே பொதுமக்களுக்கு எளிதாக தேசியக்கொடி கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை நடைபெறுகிறது.

அந்த வகையில் கோவையில் உள்ள தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவை கூட்ஸ் ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. தேசியக்கொடி விற்பனையை முதுநிலை தபால் அதிகாரி ஜெயராஜ் பாபு தொடங்கி வைத்தார்.

தேசியக்கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோவை அஞ்சல் கோட்டத்தில் ஆர்.எஸ்.புரம், கோவை சென்ட்ரல், கணபதி, சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், ராம்நகர் மற்றும் முக்கிய தபால் நிலையங்களில் தேசியக் கொடியை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe