கோவையில் நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் எம்.பி. பி.ஆர்‌.நடராஜன் வலியுறுத்தல்..!

published 1 year ago

கோவையில் நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் எம்.பி. பி.ஆர்‌.நடராஜன் வலியுறுத்தல்..!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆட்சியரை சந்தித்தார்.

அப்போது கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு  நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள S வளைவு பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்திட ரவுண்டானா அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும்,  தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
 

மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தரைப்பாலம் விரிவுபடுத்துவது குறித்தும், சாயிபாபா காலனி பகுதியில் அமைய உள்ள மேம்பாலம் குறித்தும் மாவட்ட ஆட்சியருடன் நாடாளுமன்ற உறுப்பினர் விவாதித்தார். சமீபத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுடன் சாயிபாபா காலனி மேம்பாலம் அமைய உள்ள பகுதியை நேரடியாக ஆய்வு செய்து இருந்தார். அது குறித்தும், அப்பகுதியில் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதத்தில் மேம்பாலம் அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம் , கே.எஸ்.கனகராஜ், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜாகீர், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் அளித்த விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe