காந்திபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!

published 1 year ago

காந்திபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!

கோவை: கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி மாணவி தனது சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அங்கு 2 நாட்கள் தங்கிவிட்டு நேற்று கோவை திரும்பினார். காந்திபுரம் பஸ்நிலையத்தில் இருந்து கல்லூரி விடுதிக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். 

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென கல்லூரி மாணவியை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையத்தை சேர்ந்த டெய்லர் ரூபன்(24) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe