விஜய் அரசியல் குறித்த மெகா சர்வே முடிவுகள்; கோவை மக்கள் கொடுத்த அதிர்ச்சி..!

published 1 year ago

விஜய் அரசியல் குறித்த மெகா சர்வே முடிவுகள்; கோவை மக்கள் கொடுத்த அதிர்ச்சி..!

கோவை: விஜய் அரசியல் குறித்து நியூஸ் க்ளவுட்ஸ் தளம் மூலமாக கோவை மக்களிடையே கருத்துக் கேட்கப்பட்டது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக உருவெடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் தனது அரசியல் ஆர்வம் குறித்து இலை மறை காய் மறையாகப் பேசி வந்தார். தனது படப் பாடல் வெளியீட்டு விழாக்களில் விஜய் பேச்சைக் கேட்கவே அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வந்தனர்.

Vijay Speech At Bigil Audio Launch | 5 Major Highlights From Vijay Speech  At Bigil Audio Launch - Filmibeat

இதனிடையே கடந்த சில வாரங்களாக விஜய் தனது அரசியல் கட்சி தொடக்கம், அறிவிப்பு குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் அப்டேட்டுகள் ஊடகங்களில் அடுத்தடுத்து வெளியான நிலையில், நேற்று அதிரடியாக தனது கட்சி பெயரை அறிவித்தார்.

"தமிழக வெற்றி கழகம்" என்று தனது கட்சி பெயரை அறிவித்தது முதல் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் விஜய் அரசியலை வரவேற்றனர். சமூக ஊடகங்களிலும் இந்த தலைப்பே டிரெண்டிங்கில் இருந்தது. விஜய் ரசிகர்கள் அளவில்லா மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து நியூஸ் க்ளவுட்ஸ் தளம் சர்வே நடத்தியது.

முழுக்க முழுக்க கோவை மக்கள் மத்தியில் இந்த சர்வே நடத்தப்பட்டது. நியூஸ் க்ளவுட்ஸ் தளத்திற்குச் சொந்தமான வாட்ஸ்-ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 2,197 பேர் வாக்களித்துள்ளனர்.

விஜய் அரசியலை கோவை மக்கள் வரவேற்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து அறிந்துகொள்ள  நியூஸ் க்ளவுட்ஸ் பணியாளர்களும் ஆர்வமாகவே இருந்தோம். எந்த ஒரு சார்பும் இல்லாமல், உண்மைத்தன்மையுடன் எடுக்கப்பட்ட இந்த சர்வேயின் தரவுகள் தற்போது பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

2026 தேர்தலில் விஜய் வெற்றி சாத்தியமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதில், சாத்தியம், வாய்ப்புகள் உள்ளன, சில இடங்களில், வாய்ப்பில்லை என மொத்தம் 4 தேர்வுகள் கொடுக்கப்பட்டன.

வாய்ப்புகள் உள்ளன என்பதை 456 பேர் தேர்வு செய்துள்ளனர். சில இடங்களில் என்பதை 457 பேர் தேர்வு செய்துள்ளனர். சாத்தியம் என்ற பதிலை 609 பேர் தேர்வு செய்துள்ளனர். அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 675 பேர் வாய்ப்பில்லை என்ற பதிலை கொடுத்தனர்.

வாய்ப்பில்லை என்ற பதிலுக்கும், சாத்தியம் என்ற பதிலுக்கும் குறைவான வித்தியாசமே காணப்படுகிறது. பொதுவாக அரசியல் கட்சி தொடங்கியதுமே ஒருவருக்கு இத்தகைய வரவேற்பு கிடைப்பது அரிது தான். என்றாலும், வாய்ப்புகள் உள்ளன, சில இடங்களில் ஆகிய பதில்களை தேர்வு செய்த மக்களை தனது கொள்கை, தலைமைப்பண்பின் மூலம் விஜய் தன் வசப்படுத்திட வேண்டிய சூழல் உள்ளது.

வாய்ப்பில்லை என்ற பதிலை தேர்வு செய்தவர்கள் அதிகம் உள்ள நிலையில், தனது அரசியல் நுணுக்கங்கள், நாகரீகமான பேச்சு, மக்களிடையே ஒன்றிப்பழகுதல், தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய தேர்தல் வாக்குறுதிகள் மூலமாக அவர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார்.

இந்த இடத்தில் விஜய் பேசிய வசனத்தையே நினைவு கூறலாம்

"நம் வாழ்க்கை ஒரு நதி போலத்தான். நம்மை வணங்குவோரும் இருப்பார்கள், நம்மை வரவேற்பவரும் இருப்பார்கள், நம்மை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். நாம் நம் கடமையை சரியான முறையில் செய்து அந்த நதி போல் போய்கிட்டே இருக்கனும்" - விஜய்.

தமிழக அரசியல் சூழலில் ரசிகர்களின் 'தளபதி' தமிழகத்தின் 'தலைவராக' மாறுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வாக்களித்த நியூஸ் க்ளவுட்ஸ் வாசகர்களுக்கு அன்பும், நன்றியும். 🙏
-நியூஸ் க்ளவுட்ஸ் குழு

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe