தமிழ்நாடு அரசாங்கம் வருகின்ற பட்ஜெட்டில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற அறிவிக்க வேண்டும்- தொழில்துறையினர் கோரிக்கை....

published 1 year ago

தமிழ்நாடு அரசாங்கம் வருகின்ற பட்ஜெட்டில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற அறிவிக்க வேண்டும்- தொழில்துறையினர் கோரிக்கை....

கோவை: தமிழ்நாடு அரசாங்கம் வருகின்ற பட்ஜெட்டில் தொழில் துறைக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெறுவது குறித்து அறிவிக்க தொழில்துறை கோரிக்கை விடுத்துள்ளனர்...

பட்ஜெட்டில் மின் கட்டணம் திரும்ப பெறும் அறிவிப்பு இல்லை என்றால் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் குதிக்க தயாராகும் தொழில்துறை
தமிழ்நாடு அரசாங்கத்தின் மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசாங்கத்தின் மின்சார வாரிய துறை, தொழில்துறை பயன்படுத்தும் மின் கட்டணத்திற்கான மின் கட்டணத்தை, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உயர்த்தினர். பீக் ஹவர் சார்ஜ் 15 % , நிலை கட்டணம் ரூபாய் 3920-லிருந்து, ரூபாய் 17200 உயர்த்தினர். தமிழ்நாடு தொழில் முனைவோர் முதலீடு செய்து அமைத்த சோலார் மின்சாரம் தயாரிப்புக்கு ரூ. 1.53 கட்டணம் விதித்து, சில மாதங்களுக்கு முன் அவைகளை நடைமுறைபடுத்தினர். 

இது தொழில் துறைக்கு கடும் நெருக்கடியாக அமைந்தது. இதனை கண்டித்த தொழில் துறை முனைவோர், தமிழ்நாடு அரசாங்க அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தினர். இந்த நிலையிலே, சிறுகுறு தொழில் முனைவோர் கடும் தொழில் நெருக்கடியில் இருந்து நீகாது இருப்பதனால், தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர், தமிழ்நாடு முழுவதும் இதுவரை எட்டு கட்டங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் பீக் ஹவர் சார்ஜ் 15 % தற்காலிக ரத்து செய்த தமிழ்நாடு அரசாங்கம், ஃபிக்சுடு சார்ஜை ஸ்மார்டு மீட்டர் பொறுத்திய பின்னர் நடைமுறைபடுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர். 

தமிழ்நாடு தொழில் முனைவோர் முதலீடு செய்து அமைத்த சோலார் மின்சாரம் தயாரிப்புக்கு விதித்த 1.53 பைசா கட்டணம், 50 % குறைத்து அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் தொழில் துறை நெருக்கடியிலிருந்து மீளவில்லை. இதனால் தொழில் முனைவோரது போராட்டம் முடிவின்றி தொடர்ந்தன. ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு மின் கட்டண உயர்வுகள் திரும்ப பெறவில்லை. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான தொழில் துறையினர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செயல்பட ஆரம்பித்திருக்கின்றனர். 

கோயம்புத்தூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர், தொழில்துறை சந்திக்கும் பல்வேறு நெருக்கடி நிலைகளை தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 13 லட்சம் சிறு குறு தொழில் முனைவோரை கொண்ட தமிழ்நாடு தொழில்துறை, நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 கோடி நபர்களுக்கான வேலைவாய்ப்பை தந்து வருகின்றது. தொழில் வளர்ச்சியில் சிறு குறு தொழிலின் பங்கு பெருமளவில் இருக்கின்றன. 

இந்த நிலையிலே, தமிழ்நாடு அரசாங்கம் உயர்த்திய தொழில் துறை பயன்பாட்டுக்கான பிக் ஹவர்ஸ் எனும் பரபரப்பு கட்டணம், நிலை கட்டணம், சோலர் உற்பத்தி கட்டணம் உள்ளிட்ட மின்சார கட்டணம் கடும் நெருக்கடிக்கு தள்ளி இருக்கின்றது. தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பிலெ, தமிழ்நாடு முழுவதும் எட்டு கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இதுவரை முதல்வரை சந்திக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை ஈர்க்கவும் முதல்வர் முனைப்பு காட்டும் நிலையில், சிறுகுறு தொழில் முனைவோரை சந்திக்காமல் இருக்கின்றார். உடனடியாக சிறுகுறி தொழில் முனைவோரை சந்தித்து, தமிழ்நாடு சிறு குறு தொழில் முனைவோர் தெரிவிக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து, வருகின்ற தமிழ்நாடு அரசாங்கத்தின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஒருவேளை பட்ஜெட்டில் தங்களின் எதிர்பார்ப்புகள் இல்லை என்றால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்குவோம். 

எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அரசு தரப்புக்கு தொழில்துறை சார்பாக ஆதரவு தரப்படும். ஒரு ட்ரில்லியன் டாலர் எக்கனாமி என்ற நிலையில் தமிழ்நாடு தொழில் துறை உலக அளவில் உயர முனைப்பு காட்டுகின் முதலமைச்சர், இதில் 25 சதவீத பங்களிப்பினை தரும் வல்லமை படைத்த தமிழ்நாடு சிறு குறு தொழில் துறையை தூக்கிவிடும் விதமாக, சிறு குறு தொழில் முனைவோர் தொழிலாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe