ஆளுநர் விவகாரத்தில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது..!தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

published 2 years ago

ஆளுநர் விவகாரத்தில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது..!தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் விவகாரத்தில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது..!தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் கலந்து கொள்ளும் 27வது தருமபுர ஆதீனம் இன்று யாத்திரை மேற்கொள்ள உள்ள நிகழ்ச்சியை துவக்கி வைக்க ஆளுனர் ரவி சென்றபோது நீட் தேர்வு மசோதா,ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களை முடக்கி உள்ள ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட ஆளுனரை நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதை கண்டித்து திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலை கழகம்,விடுதலை சிறுத்தைகள்,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிய கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆளுனர் வாகனத்தின் மீது கருப்பு கொடி மற்றும் பதாகைகள் வீசியதாக செய்திகள் வெளியானது.ஆளுனர் வாகனம் தாக்கபட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடியா அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது பதிலை கேட்காமலேயே எதிர்கட்சி தலைவர் வெளியில் சென்றுள்ளார் எனவும் இதுதான் வாய்ப்பு என இதை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளின் இயல்பு தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான பொய் எனவும் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்றவர் ஆளுநரின் பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றார். இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது என்றார்.

பாதுகாப்பு விஷயத்தில் ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வழக்கமாக சேர்ந்தே அறிக்கை விடும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுநர் விவகாரத்தில் தனித்தனியாக அறிக்கை விட்டுள்ளனர் எனவும் அப்போது தெரிவித்தார்.

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe