கோவையில் கை, கால்கள் கட்டி நாய் கொடூர கொலை! சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 1 year ago

கோவையில் கை, கால்கள் கட்டி நாய் கொடூர கொலை! சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் அருகே கடந்த 5ம் தேதி நாய் ஒன்று கால்கள் கட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து  விலங்குகள் நல ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர்  விசாரித்ததில் உயிரிழந்த நாய் சாலையோரத்தில் சுற்றும் நாய் என்பது தெரியவந்துள்ளது. 

பின்னர் நாய் வீசப்பட்ட இடத்தின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் நாயை சாக்கில் சுற்றிக்கொண்டு வந்து போட்டுச் செல்லுவது பதிவாகி இருந்துள்ளது. இதனை அடுத்து பாலகிருஷ்ணன் உயிரிழந் நாயை மீட்டு சீரநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நாயை பாதுகாப்பாக வைத்துள்ளனர். இது நாயின் உயிரிழப்பு குறுத்து விசாரணை நடத்த பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படைய பீளமேடு போலீசார் 2பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து விலங்குகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில்  தொடர்ச்சியாக தெருவில் சுற்றி திரியும் நாய்கள் இவ்வாறு கால்கள் கட்டப்படும், கழுத்து நெறிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு வருகின்றது எனவும் இது தொடர்பாக தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றோம் என தெரிவித்தார்.  இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயிரிழந்த நாய்களை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடத்தி வருகின்றோம் எனவும் இதேபோன்று சாலையில் ஆதரவின்றி சுற்றி திரியும் குதிரைகள், கழுதைகள், மாடுகளை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்தார்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/Vcyw1-83f74?si=qocvd2xiaz3m3_fP

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe