Breaking : MyV3 Ads நிறுவன உரிமையாளர் கோவையில் கைது...!

published 1 year ago

Breaking : MyV3 Ads நிறுவன உரிமையாளர் கோவையில் கைது...!

கோவை: மை வி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து
சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்ற அதன் உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மை வி3 நிறுவனம் விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சத்தி ஆனந்த் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது சத்தி ஆனந்த் கூறுகையில், ''மை வி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாகவும், தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன்.'' என்றார்.

தொடர்ந்து,புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் சக்தி ஆனந்த் உட்பட அவரது ஆதரவாளர்கள், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe