திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்- கோவையில் நத்தம் விஸ்வநாதன் பேட்டி...

published 1 year ago

திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்- கோவையில் நத்தம் விஸ்வநாதன் பேட்டி...

கோவை: அதிமுக தேர்தல் அறிக்கை என்பது ஆக்கப்பூர்வமான தேர்தல் அறிக்கை எனவும் திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் அறிக்கையில் கூறியதை ஒன்று கூட செயல்படுத்தவில்லை என நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் என்ற தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாய்வு கூட்டம் ஆனது நடைபெற்றது. நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த குழு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி செம்மலை, ஆர் பி உதயகுமார் ஓ எஸ் மணியன் வைகை செல்வன் எஸ் பி வேலுமணி, உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர் பின்னர் விவசாய பிரதிநிதிகள் தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் விஸ்வநாதன் அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது அபூர்வமான தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அறிக்கையாக இந்த தேர்தல் அறிக்கை உள்ளது நூற்றுக்கும் மேற்பட்ட சங்கத்தினர்கள் இடம் கேட்டு இந்த தேர்தலை அறிக்கையானது முழுமையாக வெளியிடப்பட உள்ளது திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் எடப்பாடி யார் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என தெரிவித்தார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe