9 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

published 1 year ago

9 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 9 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிறுவன் ஹர்ஷித் (9 வயது). இவர் தனது பெற்றோருடன் நேற்று புறப்பட்டு திருப்பதிக்குச் சென்றுள்ளார். 

அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு இரவு அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியது முதலே சிறுவன் உடல் நலன் குன்றி இருந்துள்ளார்.  பயண அலைச்சல் காரணமாக சிறுவன் சோர்வாக இருக்கலாம் என்று ஹர்ஷித்தின் பெற்றோர் அவரை உறங்கக் கூறியுள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் சிறுவன் மயங்கியுள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. சமீப காலமாக குழந்தைகள் மாரடைப்பால் உயிரிழந்து வருவது அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe