எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை- கோவையில் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்...

published 1 year ago

எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை- கோவையில் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்...

கோவை: எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கோவையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அதிமுகவில் தெருமுனைப் பிரச்சாரங்கள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுக கோவை புறநகர் மாவட்டம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் செல்வபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா ஆகியோர் பேசினர்.

அப்போது பேசிய  எஸ்.பி.வேலுமணி இந்த அரசில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்றும் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களிடம் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் பணம் நிறுத்தி விடுவோம் என்று திமுகவினர் சொல்வார்கள்,  அப்படியெல்லாம் பணத்தை நிறுத்த முடியாது எனவும்  நாங்கள் அப்படி விட்டு விட மாட்டோம் எனவும்  கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe