மாநில உரிமைகளை அதிமுக அடகு வைத்து விட்டு அதனை மீட்க துணிவதில்லை- கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு...

published 1 year ago

மாநில உரிமைகளை அதிமுக அடகு வைத்து விட்டு அதனை மீட்க துணிவதில்லை- கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு...

கோவை: கோவை கொடிசியாவில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று மேடையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,3 நாட்கள் திமுகவின் 68,000 பாக முகவர்களுக்கும், 6,80,000 பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குமான கூட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். பாசிசம் சரிய தொடங்குவதற்கு காரணம் ஸ்டாலின் என்றும், மாநில உரிமையை பற்றி தொடர்ந்து பேசி வருவதும் தான் காரணம். திராவிட மாடல் அரசின் 33 மாதங்களில் 1339 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த அரசாக உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழ் மொழி அர்ச்சனை என கொண்டு வந்து, "சுக்னாபரதம்" என விநாயக சமஸ்கிரத துதியையும் பாடி, சமஸ்கிருதம் புரியவில்லை, தமிழ் தான் புரிகிறது.

ஆன்மீகத்திற்கு எதிரானது திமுக என பரப்ப பாசிசம் முயல்வதாகவும், திப்பு சுல்தானும் தீரன் சின்னமலையும் நண்பர்கள்.அப்போதைய ஆங்கிலேயர்களை எதிர்க்க ஒன்றினைந்தது.மாநில உரிமைகளை அதிமுக மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது.இருப்பினும் மாநில உரிமைகளை மீட்டெடுக்க முதல்வர் அழைத்தாலும் அவர்கள் துணிந்து வராமல், தங்கள் மீது வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். சிறையில் உள்ள செந்தில் பாலாஜி என்பதற்காக இல்லை, திமுக தொண்டர் அடிப்படையில், அவருக்கு துணையாக திமுக இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்த அமலாக்கத்துறை, ஐ டி., யை மத்திய அரசு ஏவி பார்க்கின்றனர்.

வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும் கோவையை காக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.சட்டமன்றத்தில் மாநில அரசால் கொடுக்கப்பட்ட அறிக்கையை வாசிக்க முடியாது என ஆளுநர் சொல்வதற்கு அதிகாரமில்லை, மிக் ஜாம் புயலில் இவ்வளவு நிதி தேவைப்படுகிறது, அவர்கள் தருவார் என நம்பிக்கையுடன் தான் தெரிவித்தும் தவறாக எதுவும் குறிப்பிடாத போதும் ஆளுநர் படிக்கவில்லை. தமிழக முதல்வர் தனது சக்திக்கு மீறி செயல்பாட்டு கொண்டிருக்கிறார்.கோவை தொகுதியில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கட்டிடமாக வெற்றியை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe