மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை!

published 1 year ago

மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை!

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை  நிலவரத்தை இந்த செய்தியில் காணலாம்.  

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. குறிப்பாக பிப்., மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஆச்சரியப்படுத்தும் வகையில் குறைந்தது.

தினமும் பவுனுக்கு ரூ.80 வரை குறைந்து மக்களை மகிழ்ச்சியடைச் செய்து வந்தது. குறிப்பாக கடந்த 13ம் தேதி பவுனுக்கு ரூ.160 விலை குறைந்தது. 15ம் அதிரடியாக பவுனுக்கு ரூ.480 குறைந்தது. 16ம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ.80 விலை குறைந்தது.

இப்படி அதிரடியாக விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று திடீரென பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.160 விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ. 5,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.46,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.128 விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,751ஆகவும், ஒரு சவரன் ரூ.38,008 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 50 பைசா குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe