முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் அதிகமாக பயனடைந்த மாவட்டம் கோவை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேச்சு...

published 11 months ago

முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் அதிகமாக பயனடைந்த மாவட்டம் கோவை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேச்சு...

கோவை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.

பழையூர் பகுதியில் துவங்கிய யாத்திரை சித்தாபுதூர் அருகில் நிறைவு பெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், ராஜீவ் சந்திரசேகர், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாத்திரையின் நிறைவாக சித்தாபுதூர் அருகே  பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய  வானதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

சிறு குறு தொழில்களுக்கு புகழ் பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் அதிகமாக பயனடைந்த மாவட்டமாக கோவை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உதிரி பாகங்கள் உலகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன.

கோயம்புத்தூர் மக்கள் என்றைக்குமே பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். உண்மையான அரசியல் சூழலை அறிந்து கொண்டு செயல்படுபவர்கள் கோவை மக்கள். 2024 ஆம் ஆண்டும் கோவை மக்கள் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்கள்.வரும் 27 ஆம் தேதி பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொது கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை பாரதிய ஜனதா கட்சியினர் ஒவ்வொருவரும் தங்களது குடும்ப நிகழ்வாக கருதி, பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும்.

கட்சியில் உழைப்பவர்களை கண்டறிந்து பொறுப்புகளை வழங்கும் கட்சியாக பாஜக உள்ளது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கட்சியில் உழைத்து பல்வேறு பதவிகளை அடைந்து இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல் வரும் தேர்தல்களில் பாஜக உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வரலாம். எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து உணர்த்திக் கொண்டு வருகிறது.

தமிழக சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சிறப்பாக கேள்விகளை எழுப்பி வருகிறார். பிற சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் செயல்படாத நிலையில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்று சிறப்பித்துள்ளது. வானதி சீனிவாசன் அவர்களிடம் அவரது அலுவலகத்தில் கொடுக்கப்படும் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரசியல் சூழல் மாறி வருவதை உணர முடிகிறது. மக்கள் மத்தியில் பாஜகவிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பாஜக தொண்டர்கள் மத்திய பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் அனைவரையும் பாஜகவிற்கு வாக்களிக்க உழைக்க வேண்டும்' என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe