ராகுல் காந்தி கோவையில் போட்டியிட வலியுறுத்தல்...!

published 11 months ago

ராகுல் காந்தி கோவையில் போட்டியிட வலியுறுத்தல்...!

கோவை: காங்கிரஸ் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற்றது. கோவை தொண்டாமுத்தூர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆகாஷ் தலைமை வகித்தார். வரவேற்புரையாக மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன் குமார் துவக்கி வைத்து பேசினார். 

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி எம் சி மனோகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் மாநாட்டின் சிறப்புரையாற்றினார் அவர் பேசும் போது, இந்திய கூட்டணியில் கோவை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும் அதுவும் கோவை தொகுதிக்கு ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. 

கோவையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 1100 கோடியில் புதிய ஐடி பார்க் துவக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. மேலும் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையிலான நடைபெற்று என்ற ஒன்றிய அரசில் திறமையற்ற நிர்வாகம் காரணமாக இளைஞர்களின் வேலைவாய்ப்பு முழுவதும் பதிவை விட்டது உயர்கல்வி கற்க மாணவர்களுக்கு கல்வி கடன் மறுக்கப்படுகிறது. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி மோடி அரசு செய்துள்ளது விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு கால்நடைகளுக்கு கீழாக மதிக்கிறது குரு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முழுமையாக அழிந்து வருகிறது. 

அதன் காரணமாக இடைத்தட்டு மக்களின் பொருளாதாரம் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மதவாத அரசியலை பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் உருவாக்குகிறது. இதன் மூலமாக வளர்ந்து வரும் இளைஞர் சமுதாயத்தில் வேற்றுமை வன்மை உருவாகிறது. இதனால் வருகின்ற பார்லிமென்ட் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் அயராது உழைத்து இந்திய கூட்டணிக்கு வெற்றி பெற செய்யுமாறு ஒவ்வொரு இளைஞர் காங்கிரசாரும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் அழகு ஜெய்பால் மாநில பொதுச் செயலாளர்கள் பச்சை முத்து மகேஷ்குமார் கவுன்சிலர்கள் காயத்ரி மாநிலச் செயலாளர்கள் விஜயகுமார் பழையூரில் செல்வராஜ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வடக்கு மாவட்ட காங்கிரஸ் டிவிசன் தலைவர்கள் வட்டார தலைவர்கள் மகிலா காங்கிரஸ்னர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe