கோவை அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓ.பி.எஸ் படம் அகற்றம்..! தொண்டர்கள் ஆவேசம்..!

published 2 years ago

கோவை அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓ.பி.எஸ் படம் அகற்றம்..! தொண்டர்கள் ஆவேசம்..!

கோவை: கோவையில் அதிமுக அலுவலகத்தில் இருந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தை கிழித்து வீதியில் வீசி அதிமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.

அதிமுக இரட்டை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை அணியினரும் மற்றொரு பக்கம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அணியினரும் பொதுச் செயலாளர் மற்றும் இணை பொதுச் செயலாளர் பதவிக்கு மோதிக் கொண்டு வந்த நிலையில் , சென்னையில் ஒற்றை தலைமை கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஒரு மனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சென்னை அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று அலுவலகத்தை சூறையாடி நிலையில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க பொதுக் குழு கூட்டத்தில் ஒரு மனதாக அனைவரின் முன்பாக அறிவிக்கப்பட்டது.



இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.இதில் குறிப்பாக கோவை அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் படம் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை கிழித்து வீதியில் வீசியெறிந்த அதிமுக.,வினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe