சென்னை: அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) மலக்குடல் புற்றுநோயின் மேலாண்மைக்கென்று இந்தியாவின் முன்னோடித்துவமான பிரத்யேக அணுகுமுறையாக அப்போலோ ரெக்டல் கேன்சர் (ARC) சிகிச்சை செயல்திட்டத்தை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்பு:
மலக்குடலை அகற்றாமல் தக்கவைப்பது மீது சிறப்பு கவனம் மற்றும் கீமோரேடியோதெரபி, புரோட்டான் தெரபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை உட்பட மேம்பட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ARC செயல்திட்டம், இந்நாட்டில் வழங்கப்படும் மலக்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையை புரட்சிகரமாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலக்குடல் புற்றுநோய் நோயாளிகளின் தனித்துவமான தேவைகளை கவனத்தில் கொள்ளும் இந்த பிரத்யேக முன்னெடுப்பு, சாத்தியமுள்ள மிகச்சிறந்த விளைவுகளை உறுதி செய்ய விரிவான மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய சிகிச்சையினை வழங்குகிறது.
அப்போலோ ஹாஸ்பிட்டல் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் நிறுவனர் – சேர்மன் டாக்டர். பிரதாப் சி ரெட்டி, ARC செயல்திட்ட மையத்தை, குரூப் ஆன்காலஜி & இண்டர்நேஷனல் (AHEL)-ன் இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
மலக்குடல் மருத்துவர் மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் (Lead), மலக்குடல் அறுவைசிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர். செந்தில் கணபதி, இரைப்பைக் குடலியல் சிறப்பு மருத்துவர் டாக்டர். சுதீப்தா குமார் ஸ்வைன், மற்றும் இரைப்பைக் குடலியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். பால முருகன் ஶ்ரீனிவாசன் ஆகியோர் ARC செயல்திட்டத்தில் இடம்பெறுகின்றனர்.
இந்திய துணை கண்டத்திலும் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் வருகை தரும் நோயாளிகளுக்கு மலக்குடல் புற்றுநோய்க்கான ஒருங்கிணைக்கப்பட்ட, பல துறைகளை உள்ளடக்கிய சிகிச்சை பராமரிப்பை வழங்கவிருக்கும் ARC செயல்திட்டம், அப்போலோ கேன்சர் சென்டரை, மலக்குடல் புற்றுநோய்க்காக இந்தியாவில் செயல்படும் ஒரு நான்காம் நிலை உயர் சிகிச்சை மையமாக ஆக்குகிறது.
360 கோண ஒரு முழுமையான அணுகுமுறையை கொண்டிருக்கும் இச்செயல்திட்டம், வளர்ச்சியடைந்த பாலிப்ஸ் (விழுது), தொடக்கநிலை மலக்குடல் புற்றுநோய், உறுப்பை அகற்றாமல் தக்கவைப்பு, ரோபோடிக் முறையில் மலக்குடல் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை, சூடாக்கப்பட்ட இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி (HIPEC) வழியாக உதர மேற்புறத்தில் பரவும் புற்றுகளுக்கு சிகிச்சை உட்பட மலக்குடல் புற்றுநோய் சிக்கல்கள் அனைத்திற்கும் சிகிச்சை தீர்வினை வழங்கும்.
கீமோரேடியேஷன் மற்றும் தடுப்பாற்றல் அடக்கு மருத்துவம் ஆகியவற்றுடன் முழுமையான புதிய துணை சிகிச்சையை வழங்கும் ஒரு தனித்துவமான நோயாளி சிகிச்சை செயல்திட்டத்தை, காத்திருந்து கவனிக்கும் செயல்திட்டத்தில் நுழைகிற, முழுமையான பதில்வினையை எட்டுகிற நோயாளிகளுக்கு இது பின்பற்றுகிறது.
கீழே இறங்கியிருக்கிற அல்லது நோயின் எச்சத்தை கொண்டிருக்கிற நோயாளிகள் மற்றும் மேம்பட்ட ரோபோடிக் அறுவைசிகிச்சைக்கு உரிய நோயாளிகளுக்கு எதிர்காலத்தில் நோய் பாதிப்பு மீண்டும் வராமல் தவிப்பதற்கு விரிவான பின்தொடர் சிகிச்சை நெறிமுறை இதில் பின்பற்றப்படுகிறது.
இதன் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை என்பதையும் கடந்து தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் ஆதரவு அந்நோயாளிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
குறைவான உறுப்பு அகற்றல் விளிம்பு நேர்மறை தன்மை விகிதங்கள் இணைப்புக்குரிய அறுவடை விகிதங்கள் மற்றும் மிக குறைவான இணைப்புக் கசிவு விகிதங்களை வெளிப்படுத்துகிறவாறு மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகளை நோயாளிகளுக்கு வழங்குவது என்பதே அப்போலோ ரோபோடிக் மலக்குடல் அறுவைசிகிச்சை செயல்திட்டத்தின் பொறுப்புறுதியாக இருக்கிறது.
காயங்களில் ஏற்படும் தொற்றுகளை மிகவும் குறைப்பது, மருத்துவமனைகளில் தங்குகிற நாட்கள் அளவையும் மறுபடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதையும் குறைப்பது மீது சிறப்பு கவனம் செலுத்தும் இச்செயல்திட்டம், மலக்குடல் புற்றுநோய் அறுவைசிகிச்சையில் மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகளை வழங்கும்.
அப்போலோ ஹாஸ்பிட்டல் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் நிறுவனர் – சேர்மன் டாக்டர். பிரதாப் சி ரெட்டி, இந்நிகழ்வில் கூறியதாவது, “இந்நாட்டிலும் உலகளவிலும் புத்தாக்கம் மற்றும் நிலைமாற்றத்தை கொண்டுவரும் புற்றுநோய் சிகிச்சையில் எமது அர்ப்பணிப்பை வலுவாக எடுத்துரைப்பதாக இந்த முக்கியமான முன்னெடுப்பு இருக்கிறது.
மலக்குடல் புற்றுநோய் என்ற ஒரே ஒரு உடல் உறுப்பை சார்ந்த மற்றும் ஒரே வகை புற்றுநோய்க்கான சிகிச்சை மேலாண்மையில் சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு தனிப்பிரிவு செயல்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். எதிர்காலத்தில் மலக்குடல் புற்றுநோய்க்கு எப்படி சிகிச்சை மேலாண்மை வழங்கப்படும் என்பதில் உலகளவில் ஒரு புதிய தர அளவுகோலை இது நிறுவப்போகிறது.
உள்நாட்டு அளவில் திறமையான மருத்துவர்களில் உயர் நேர்த்தியையும், சர்வதேச ஒத்துழைப்புகளையும் சேர்க்கிற ஒரு ஒருங்கிணைத்த அணுகுமுறையை கொண்டு முன்னெடுக்கப்படும் எமது புதுமையான தொழில்நுட்பங்கள், புற்றுநோய் சிகிச்சை தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.”
அப்போலோ ஹாஸ்பிட்டலின் இயக்குநர் - குரூப் ஆன்காலஜி & இன்டர்நேஷனல் திரு. ஹர்ஷத் ரெட்டி பேசுகையில், “அப்போலோ மலக்குடல் புற்றுநோய் செயல்திட்டத்தின் அறிமுகம், இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேலும் முன்னேற்றுவதில் எமது பொறுப்புறுதிமிக்க பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கிறது.
மலக்குடல் புற்றுநோயுள்ள நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை விருப்பத்தேர்வுகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த புதுமையான மற்றும் தனிச்சிறப்பான அணுகுமுறை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் உலகத்தரத்திலான சிகிச்சையை பெறுவதற்கான அணுகுவசதி நோயாளிகளுக்கு கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு சிகிச்சையின் சிறந்த விளைவுகள் உறுதி செய்யப்படுகின்றன.
அடுத்த 10 ஆண்டுகள் கால அளவிற்குள் மலக்குடல் புற்றுநோய் பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 80% அதிகரிக்கும் என முன்கணிப்பு செய்யப்பட்டிருப்பதால் இது உருவாக்கும் மிகப்பெரிய சுமையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சிக்கலான நோய்க்கான மேலாண்மையில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதாக இச்செயல்திட்டம் அமையும். மலக்குடல் புற்றுநோய்க்கு விரிவான மற்றும் எளிதில் பெறக்கூடிய சிகிச்சையை வழங்கும் இது, ஒரு முன்னோடித்துவமான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை, என்று கூறினார்.
இந்தியாவில் ரோபோடிக் உதவியோடு மலக்குடல் புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சைகளை மிக அதிக எண்ணிக்கையில் செய்திருக்கும் சாதனையாளரான மலக்குடல் மருத்துவர் மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் பேசுகையில், "இந்தியாவில் மலக்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேம்படுத்துவதில் நாங்கள் கொண்டிருக்கும் தளராத பொறுப்புறுதிக்கு ஒரு சிறந்த சான்றாக, இப்போது தொடங்கப்பட்டிருக்கும் அப்போலோ மலக்குடல் புற்றுநோய் சிகிச்சை செயல்திட்டம் இருக்கிறது.
அவர்களது மலக்குடலை வெட்டி அகற்றாமல் தக்க வைத்துக்கொள்ள மலக்குடல் புற்றுநோயுள்ள நபர்களுக்கு சாத்தியமுள்ள அனைத்து சிகிச்சை செயல்திட்டங்களையும் வழங்குவது இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும். நிரந்தரமான பையை உருவாக்குவது அல்லது பெருங்குடல் திறப்பு ஆகியவை நிகழாமல் தடுப்பதற்கு நவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை உத்திகளின் மூலம் உறுப்பில் எஞ்சியிருக்கும் புற்றுகளை அகற்றுவது மற்றும் அப்பகுதியினை மறுகட்டமைப்பு செய்வது என்ற நோக்கத்தோடு நவீன கீமோரேடியோதெரபி நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
இந்த முன்னெடுப்பை முதன் முறையாக மேற்கொள்வதிலும் மற்றும் மலக்குடல் புற்றுநோய் மேலாண்மையில் ஒரு புதிய தரஅளவுகோலை நிறுவுவதிலும் மற்றும் இதற்கான அறுவைசிகிச்சையில் ஒரு துணை சிறப்பு பிரிவுக்கான பாதையை உலகிற்கு காட்டுவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று விளக்கமளித்தார்.
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்கான தனித்துவமான சிகிச்சை திட்டத்தை தொடங்குவதன் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை பராமரிப்பை மேம்படுத்துவது மீதான இதன் அர்ப்பணிப்பு நேர்த்தியாக வெளிப்படுகிறது.
இந்தியாவில் மலக்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை பராமரிப்பு தளத்தை மறுவடிவமைப்பு செய்வதை இலக்காகக் கொண்ட அப்போலோ மலக்குடல் புற்றுநோய் சிகிச்சை செயல்திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இத்துறையில் ஒரு புதிய தர அளவுகோலை APCC வெற்றிகரமாக நிறுவியிருக்கிறது.