ஊதுபத்தி தீயில் ஸ்டாலின் உருவம்..! கோவை கலைஞர் அசத்தல்!

published 11 months ago

ஊதுபத்தி தீயில் ஸ்டாலின் உருவம்..! கோவை கலைஞர் அசத்தல்!

கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு எரியும் ஊதுபத்தியில் ஸ்டாலினின் ஓவியத்தை வரைந்துள்ள கோவை கலைஞர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா ஊதிபத்தியை எரியவிட்டு அதனைக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

இது குறித்த அவர் கூறுகையில் மு.க.ஸ்டாலின் எத்தனையோ விமர்சனங்களை கடந்து சூரியன் போல் மக்களுக்காக உழைத்து வருவதாகவும் அதனை எடுத்துரைக்கும் விதமாகவே இரண்டு மணி நேரம் செலவழித்து இந்த நெருப்பு ஓவியத்தை வரைந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe