கோவையில் தென்னை வாடல் நோய் குறித்து கள ஆய்வு...

published 11 months ago

கோவையில் தென்னை வாடல் நோய் குறித்து கள ஆய்வு...

கோவை: கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் தென்னையில் வாடல் நோய் பரவலாக தாக்கி தேங்காய் உற்பத்தியை பெருமளவில் பாதித்துள்ளது. இது குறித்து தகவல் சேகரிக்கவும் இந்த நோயை கட்டுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிவிக்கவும் கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஆகிய மூன்று வட்டாரங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விவசாயிகள் மற்றும் அரசு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.

 

இந்த கள ஆய்வில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், வேளாண் அலுவலர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி பூசனை கோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.

இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்களின் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்களைச் சேகரித்து ஆய்வறிக்கை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கள ஆய்வுகள் நாளை மற்றும் நாளை மறுநாளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe