கோவையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய விஜய் தொண்டர்கள்!

published 11 months ago

கோவையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய விஜய் தொண்டர்கள்!

கோவை: கோவையில் விஜய்யின் தொண்டர்கள் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரும் அவரது ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

கட்சி தொடங்கியதும் ரசிகர்கள் அனைவரும் மக்கள் பணியை தீவிரப்படுத்த விஜய் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே அவரது ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பணியில் இறங்கி உள்ளனர்.

அந்த வகையில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 60வது வார்டில் விஜய் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினர். 

வாரந்தோறும் ஒரு நாள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இதுபோன்று உணவு விநியோகித்து வருவதாக விஜய் தொண்டர்களில் ஒருவரான சரவணன் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe