தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 43-வது பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு...

published 11 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 43-வது பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு...

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 43-வது பட்டமளிப்பு விழா, வருகின்ற 09.03.2024 அன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இவ்விழாவிற்கு, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையேற்கிறார் எனவும் தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரும், இப்பல்கலைக் கழகத்தின் இணை வேந்தருமான  எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் புதிய விருதுகளுக்கான அறநல்கை பரிசுகளையும், பதக்கங்களையும் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில், வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் 
மனோஜ் அகுஜா,
கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றவுள்ளதாகவும்
இப்பட்டமளிப்பு விழாவில் உறுப்பு கல்லூரிகளில் இருந்து 1589 மாணவர்கள் நேரடியாகவும், 299 மாணவர்கள் தபால்  மூலமாகவும் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 1845 மாணவர்களும் பட்டங்களைப் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe