இரவு நேரத்தில் ஜொலிக்கும் நமது தலைநகர்... விண்வெளியில் இருந்து...!

published 11 months ago

இரவு நேரத்தில் ஜொலிக்கும் நமது தலைநகர்... விண்வெளியில் இருந்து...!

இரவு நேரத்தில் ஜொலிக்கும் நமது நாட்டின் தலைநகர் மற்றும் சில நாடுகளில் உள்ள நகரங்களின் புகைப்படங்களை சர்வதேச விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது. 

நமது பூமியை கோள வடிவில் காண்பதே நமக்கு பிரம்மிப்பையூட்டும். நாம் புவியில் அன்றாடம் பார்க்கும் பிரம்மாண்டமான விஷயங்களை சின்னச்சின்னதாய் பார்க்கையில் பிரபஞ்சம் எத்தனை பெரியது என்ற வியப்பும் நம்மிடம் தொற்றிக்கொள்ளும்.

இதனிடையே சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் இருந்து இரவு நேரத்தில் எடுக்கப்பட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

அதில் சிலி நாட்டின் சாண்டியாகோ, மெக்சிகோ நகரம், புது டில்லி மற்றும் சீனாவின் ஷாங்காய் நகரம் ஆகிய இடங்களில் இரவு நேர புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe