கோவையில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிறந்தநாள் விழா...!

published 2 years ago

கோவையில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிறந்தநாள் விழா...!

கோவை: இன்று கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு 70 ஆம் ஆண்டு பிறந்த நாள். இந்த பிறந்த நாள் கோவையில் கொண்டாடப்பட உள்ளது. அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது பிறந்த நாளை "வைரமுத்து இலக்கியம் 50" என கோவை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கவிப்பேரரசு வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: 

கோவை நண்பர்கள் என் மீது நிபந்தனை இல்லாத பாசம் வைத்தவர்கள். இந்த 50 ஆண்டுகளில் நான் சாதித்தது எதுவும் இல்லை. நான் பெற்ற விருதுகள் எல்லாம் சாதனைகள் என சொல்லிவிட முடியாது. அவை எல்லாம் உடன் விளைவுகள். இனிமேல் தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன ஊட்ட கருத்துக்கள் சொல்ல வேண்டும்? புத்தம் புதிய படைப்புகள் என்ன படைக்க வேண்டும்? இருக்கின்ற இடைவெளியை எப்படி நிரப்ப வேண்டும்? என்று சிந்திக்கக் கூடிய வயதில் நான் இருக்கிறேன்.

மேலும் நடைபெற உள்ள விழாவில் கவிஞர்கள் திருநாள் விருதை வழங்க உள்ளோம். இது தமிழர்களின் கொண்டாட்டமாக இருக்கும். தமிழின் கோலாட்டமாக இருக்கும். பத்திரிக்கைகளால் தான் எனது படைப்புகள் வளர்ந்தது என்று சொல்லிக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. கோவை மாவட்டத்தில் 1992ம் ஆண்டு நடந்த எனது "சிகரங்களை நோக்கி" என்ற விஞ்ஞான கவிதை நூல் இங்குதான் வெளியிடப்பட்டது. அது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. 

சினிமா பாடல்களை பொறுத்தவரைக் கொண்டாட்ட கருவி, கற்பிக்கிற கருவி(இலக்கியம்) என இரண்டு உள்ளது. இலக்கியம் ஒரு பக்கம் கொண்டாட்டம் ஒரு பக்கம் என இருந்த சினிமா தற்பொழுது கொண்டாட்டம் மட்டுமே போதும் என்று குறுகிவிட்டது. அது கலை விபத்து. மேலும் வெகு விரைவில் இலக்கியம் பாதி கொண்டாட்டம் பாதி அல்லது இலக்கியமே முழுமை என்ற நிலைமைக்கு சினிமா வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

1960களில் நாங்கள் படிக்கின்ற பொழுது ஜெயகாந்தன், பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், மெளனி, கண்ணதாசன், சுரதா, வாணிதாசன், முடியரசன் போன்ற கவிஞர்கள் இருந்தார்கள். அப்போது அச்சு ஊடகங்கள் அதிகம் இருந்ததாகவும் அச்சு ஊடகங்கள் தான் இலக்கியத்தை எப்பொழுதும் தூக்கி நிறுத்தியதாகக் கூறினார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe