சென்னை, கோவை, மதுரை, புதுவையில் அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி?

published 11 months ago

சென்னை, கோவை, மதுரை, புதுவையில் அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி?

சென்னை, கோவை, மதுரை, புதுவையில் அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி இருக்கும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வருகிறது.

இதனிடையே அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை நிலவரம் என்ன என்பது குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை (15ம் தேதி) வரை வெப்பம் 35 டிகிரி வரை பதிவாகும் என்றும், சனிக்கிழமை 36 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மதுரையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று முதல் வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 38 டிகிரி வரை பதிவாகுமென்றும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெப்பம் 39 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 34 டிகிரி வரை பதிவாகும் என்றும், வெள்ளி, சனிக்கிழமையன்று 35 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ள  நியூஸ்க்ளவுட்ஸ்  சார்பில் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இந்த பயனுள்ள தகவலை உங்கள் குடும்பத்தார், சுற்றத்தாருக்கு பகிர்ந்து உதவிடுங்கள்…

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe