கோவை தொகுதி மா.கம்யூ.,க்கு கிடையாது; திமுக வேட்பாளர் யார்?

published 11 months ago

கோவை தொகுதி மா.கம்யூ.,க்கு கிடையாது; திமுக வேட்பாளர் யார்?

கோவை: தி.மு.க., கூட்டணியில் கோவை தொகுதி இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சி.பி.எம்) ஒதுக்கீடு செய்யப்படவில்லை: இதனிடையே கோவைக்கான தி.மு.க., கூட்டணி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணி வேட்பாளரான பி.ஆர்.நடராஜன் தற்போது கோவை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் கோவை தொகுதிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசன் கோவையில் நேரடியாக களம் இறங்குவார், அதனால் இந்த முறை தி.மு.க., கூட்டணியில் கமலுக்கு தான் சீட் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த சி.பி.எம்., தலைவர்கள், "கமல் கோவையில் தான் நிற்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. கோவை நாங்கள் வெற்றி பெற்ற தொகுதி. எனவே அதனை மீண்டும் கேட்போம்." என்று தெரிவித்தனர்.

இந்த சுழலில், இன்று தி.மு.க., நிர்வாகிகளுடன் இந்திய கம்யூ, மா.கம்யூ., பேச்சுவார்த்தை நடத்தியதில், இந்திய கம்யூ.,க்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மா.கம்யூ.,க்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதனால் கோவை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனிடையே கட்சி வட்டாரத்தில் யாருக்கு சீட் ஒதுக்கப்படும் என்று பேச்சு தொடங்கியுள்ளது.

கோவை தொகுதிக்காக தி.மு.க., கூட்டணி வேட்பாளர் யார் என்று யூகித்துவிட்டீர்கள் என்றால் பின்வரும் லிங்க்-ல் கமென்ட் பன்னுங்க… https://www.facebook.com/photo.php?fbid=839898368156417&set=pb.100064087839046.-2207520000&type=3

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe