இனி ஆனைக்கட்டி பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம்- பெண்கள் மகிழ்ச்சி...

published 11 months ago

இனி ஆனைக்கட்டி பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம்- பெண்கள் மகிழ்ச்சி...

கோவை: தமிழ்நாடு அரசின் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக  பயணம் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்திலும் நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் இருந்து ஆனைகட்டி மலைப்பகுதி வரை செல்லும் புறநகர் பேருந்துகளில் இலவச பயணம் இல்லாததால் மலைவாழ் பெண்கள் தங்களுக்கும் இலவச பயணம் இருந்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை தெரிவித்து வந்தனர்.  

இந்த நிலையில் விடியல் பயணத்தின் கீழ் காந்திபுரத்தில் இருந்து ஆனைகட்டி வரைக்கும் இயக்கப்படும் ஐந்து புறநகர் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும் விடியல் திட்டம் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று(14.03.2024) முதல் காந்திபுரத்தில் இருந்து ஆனைகட்டி வரை இயக்கப்படும் ஐந்து புறநகர் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். இதனால் அவ்வழியாக பயணிக்க கூடிய பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe