கரும்பு விவசாயி சின்னத்தில் வேறு கட்சி போட்டி...! சீமானுக்கு தலைவலி!

published 11 months ago

கரும்பு விவசாயி சின்னத்தில் வேறு கட்சி போட்டி...! சீமானுக்கு தலைவலி!

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போடுவதாக அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே இதே சின்னத்தில் போட்டியிட்ட சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்த கரும்பு  விவசாயி சின்னம், தேர்தல் ஆணையத்திடம் முறையாக கோரப்படாததால், அந்த சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

முதலில் கேட்டவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னத்தை தேர்தல் ஆணையம் பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியதாக கூறியது. இதற்கு நா.த.க., கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

தனக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றே இதனை செய்திருப்பதாக சீமான் வேதனை தெரிவித்து வந்தார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சின்னத்தைப் பெறுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்ற, தமிழகத்தில் இதுவரை நுழையாத  பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி இந்த முறை தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கரும்பு விவசாயி சின்னம் நா.த.க.,வுடையது என்று நினைக்கும் மக்கள் பலரும் அந்த கட்சிக்கு தங்கள் வாக்குகளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் சீமான் மற்றும் அவரது தொண்டர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சீமான் தரப்பு இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வழக்கின் முடிவை விரைந்து பெற்றால் தான், நா.த.க.,வின் வாக்கு வங்கி காப்பாற்றப்படும் என்றும், கரும்பு விவசாயி சின்னம் இல்லை என்ற முடிவு கிடைத்தால், ஒதுக்கப்படும் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கச் சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் இது அவர்களுக்கு விடுக்கப்பட்ட பெரிய சவால் என்றும் அரசியல் விமர்சகர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இந்த லிங்கில் சென்று பதிவிடவும்: https://www.facebook.com/share/p/hU6ZUNTaTuv2eJ6p/?mibextid=oFDknk

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe