Breaking News : இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி என்ன? தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

published 11 months ago

Breaking News : இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி என்ன? தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

இந்திய நாடாளுமன்றத்தின் 17வது தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அறிவித்துள்ளார்.

இந்திய துணைக்கண்டம் எதிர்கொள்ளும் 17வது தேர்தல் இது.

கடந்த இரண்டு முறையும் பா.ஜ., இந்தியாவில் ஆட்சியமைத்த நிலையில், மத்தியில் ஆளும் தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது.

இதில் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

இந்தத் தேர்தலில் 96.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 49.7 கோடி ஆண் வாக்காளர்களும் 47. 1 கோடி பெண் வாக்காளர்களும் வாக்களிக்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன மொத்தமாக 10.5 லட்சம் வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும். மதரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது.

விளம்பரங்களை நம்பத் தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தக் கூடாது.

நாடாளுமன்ற தேர்தலோடு 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளன.

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட தேர்தல் நடைபெறும்.

ஜூன் மாதம் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதியும், மே 7ல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும்.

3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.4ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதி நடைபெறுகிறது.

5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25ம் தேதியும் நடைபெறுகிறது.

7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும்

என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe